Home
Mobile

OnePlus ப்ரோ இதோ வந்துட்டேன். 100W சார்ஜிங், 8500mAh பேட்டரி உடன் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன ஐக்யூ (iQOO) நிறுவனமானது, அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய பேட்டரி மேம்பாட்டிற்கு (Big Battery Upgrade) தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த அப்கிரேட்-ஐ பெறவுள்ளது ஐக்யூ 16 (iQOO 16) மாடல் ஆகும்.

நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி ஐக்யூ 16 மாடல் ஆனது, அதன் முந்தைய மாடலை விட கணிசமாக பெரிய பேட்டரிகளுடன் சோதிக்கப்பட்டு வருகிறது. ஐக்யூ நிறுவனத்தின் இந்த நடவடிகை - மிக அதிகத்திறன் கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரிகளை நோக்கிய தொழில்துறை அளவிலான போக்கை தொடர்கிறது.

100W சார்ஜிங், 8500mAh பேட்டரி உடன் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

சமீபத்திய லீக்கின் படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது 8,500mAh பேட்டரியுடன் சோதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த போன், குவால்காமின் வரவிருக்கும் 2என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், வயர்லெஸ் சார்ஜிங்குடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் கிஸ்பாட்டின் கருத்து: பிக் பேட்டரி என்கிற தகவல்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்த தகவல் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. ஏனென்றால் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகாது என்று டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) கூறுகிறார்.

மேலும் அவர். திட்டமிடப்பட்டிருந்த பிற அறிமுகங்களை ரத்து செய்துவிட்டு, ஐக்யூ நிறுவனம் ஒரு பட்ஜெட் ரக இஸட்-சீரிஸ் ஸ்மார்ட்போனை மட்டுமே அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இது உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 16-க்கு பெரிய அளவிலான போட்டி இல்லமால் போகலாம். இது 9000mAh பேட்டரி உடன் வருகிற அக்டோபர் மாதம் சீனாவிலும், பின்னர் நவம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட எந்த தகவல்கள் குறித்தும் ஐக்யூ நிறுவனம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், DRAM மற்றும் NAND மெமரி ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக இந்த உத்தி பின்பற்றப்படலாம் என கருதப்படுகிறது. ஏனெனில், மேற்குறிப்பிட்ட விலை உயர்வு ஒட்டுமொத்தத் துறையிலும் உயர்தர (flagship) ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்து வருகின்றன; ஆகையால் ஐக்யூ இந்த முடிவை எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15 ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6 கொண்டு இயங்குகிறது. இதற்கு 5 ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 7 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.85-இன்ச் சாம்சங் M14 8T LTPO அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 2கே ரெசல்யூஷன், 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உள்ளது. இது 16GB வரையிலான LPDDR5x ரேம், 512GB வரையிலான UFS4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் க்யூ3 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் ஆகியவைகள் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 16 ஏபெக்ஸ் எடிஷனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் சோனி IMX921 ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி IMX882 1/1.95-இன்ச் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்புறத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 + IP69 தரமதிப்பீடு பெற்ற கட்டமைப்பை கொண்டுள்ளது. கடைசியாக இதில் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உள்ளது, இது 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 16 Tipped to Launch With 100W Fast Charging 8500mAh battery 2nm Snapdragon 8 Elite Gen 6 Pro chip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X