Home
Mobile

நாடே இந்த ஐக்யூ போனுக்கு வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ 16 (iQOO 16) ஸமார்ட்போன் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, iQOO 16 இந்தியாவில் டிசம்பர் 15 மற்றும் 17 தேதிகளில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): 6.85 இன்ச் அமோலெட் சாம்சங் எம்16 டிஸ்பிளே உடன் இந்த புதிய ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இதில் பிரீமியம் குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட்,10000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

நாடே இந்த ஐக்யூ போனுக்கு வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஓர்ஜின்ஓஸ் 7(OriginOS 7)மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மூலம் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

IP68 மற்றும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் ஐக்யூ 16 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8400mAh பேட்டரி கொண்டுள்ளது ஐக்யூ 16 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

நாடே இந்த ஐக்யூ போனுக்கு வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

கியூ4 கேமிங் சிப்செட், ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த ஐக்யூ போனில்உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சீனாவில் ஐக்யூ 16 போனின் ஆரம்ப விலை ரூ.85,000-ஆக உள்ளது. அதேபோல் இந்த ஐக்யூ போன் இந்தியாவிலும் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 16 India Launch Date Tipped for Mid-December: What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X