Home
Mobile

ஐக்யூ களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8400எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ 16 அம்சங்கள் (iQOO 16 Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் ஐக்யூ 16 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஐக்யூ  களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8400எம்ஏஎச் பேட்டரி..எந்த மாடல்?

6.85-இன்ச் Samsung M16 LEAD AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது ஐக்யூ 16 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இந்த ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Periscope கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த ஐக்யூ போனில் உள்ளன. அதேபோல் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8400எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ 16 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: 91mobiles

Best Mobiles in India

English summary
iQOO 16 Display Officially Revealed Ahead of September 14 Event
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X