OnePlus-ல் இறங்கிய இடி.. 8500mAh பேட்டரி, Snapdragon 8 Elite Gen 6 Pro உடன் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடலின் முக்கிய "எதிரி" ஆகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனிடம் இருந்து என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ளது
ஐக்யூ 16 சிப்செட்: கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் ஒரு பொறியியல் முன்மாதிரி (Engineering prototype) தற்போது குவால்காமின் SM8975 சிப்செட் உடன் சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த சிப்செட் - ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் ஆக அறிமுகமாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 16 பேட்டரி: மேலும் வரவிருக்கும் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் 8500mAh பேட்டரி இடம்பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது, தற்போதைய ஜெனரேஷன் ஐக்யூ 15 (iQOO 15) மாடலில் ஏற்கெனவே உள்ள 7,000mAh பேட்டரியை விட ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்.
ஐக்யூ 16 டிஸ்பிளே: வரவிருக்கும் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது 'அல்ட்ரா-ஹை' ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய ஒரு பிளாட் ஆன 2கே டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
துல்லியமான டிஸ்பிளே சைஸ் வெளியிடப்படவில்லை என்றாலும், ஐக்யூவின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்கள் கேமிங் செயல்திறன், டச் ரெஸ்பான்சிவ்னஸ் மற்றும் நிலையான ஃபிரேம் ரேட்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதையே நாம் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் ஐக்யூ 16 மாடலுக்கு ஒன்பிளஸ் கடும் போட்டியாக இருக்கும். ஏனென்றால் அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் போன் ஆன ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 200Hz+ ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ நிறுவனம் இந்த அளவுகோலை தாண்டுமா இல்லையா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமாக, ஐக்யூ 16-ன் இந்த முன்மாதிரியில் உள்ளமைக்கப்பட்ட கூலிங் ஃபேன் இல்லை என்று கூறப்படுகிறது. இது, ஐக்யூ நிறுவனம் ஆக்டிவ் கூலிங் ஹார்டுவேரை விட, உள்ளக வேப்பர் சேம்பர் கூலிங் மற்றும் மென்பொருள் அளவிலான வெப்ப சரிசெய்தலை அதிகம் நம்பியிருப்பதை உணர்த்தக்கூடும்.
ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? அக்டோபர் மாதம் நடைபெறும் ஸ்னாப்டிராகன் மாநாட்டிற்குப் பிறகு ஐக்யூ 16 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல், முதலில் இது சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும், அதன் பின்னரே இந்திய சந்தைக்கு வரும். ஒன்பிளஸ் 16 மாடலும் இதையேதான் பின்பற்றும்.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5கே டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அறிக்கைக, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 200ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை அடையக்கூடும் என்று கூறுகின்றன, இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன், 2என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட்டில், LPDDR6 ரேம் உடன் இணைந்து இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காம்பினேஷன் - செயல்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பில் நல்ல மேம்பாடுகளை குறிக்கிறது.
மேலும் இதில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், ண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 17 ஆகிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 9000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ஐக்யூ 16 மாடலில் எதிர்பார்ப்பதை விட பெரிய பேட்டரியை பேக் செய்யலாம். ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 16 VS ஐக்யூ 16 போட்டி - தரமாக இருக்க போகிறது!


Click it and Unblock the Notifications