Home
Mobile

வச்சி செஞ்சிட்டாப்ல.. 144FPS கேமிங்.. 2K டிஸ்பிளே.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த போன்?

ஐக்யூ நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக வெளியாக இருக்கும் ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் மற்றும் கேமிங் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியீட்டு தேதி உறுதியானது, இதைத்தொடர்ந்து இந்த பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

சீன மார்கெட்டில் வருகிற மே 20ஆம் தேதி 19:00 மணிக்கு இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த தேதியை உறுதி செய்த கையோடு சிப்செட் மற்றும் கேமிங் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 மான்ஸ்டர் எடிஷன் (MediaTek Dimensity 9500 Monster Edition) சிப்செட் கொடுக்க உள்ளது.

வச்சி செஞ்சிட்டாப்ல.. 144FPS கேமிங்.. 2K டிஸ்பிளே.. 200MP கேமரா!

இந்த சிப்செட்டானது, ஃபிரேம் ரேட் ஸ்டெபிலிட்டியில் 34 சதவீத பூஸ்ட் கொடுக்கும். மான்ஸ்டர் சூப்பர் கோர் என்ஜின் (Monster super-core engine) கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க இது கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கொடுக்க கியூ2 ஈ-ஸ்போர்ட்ஸ் கேமிங் சிப் (Q3 e-sports Gaming Chip) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 2K சூப்பர் ரெசொலூஷன் கிடைக்கும்.

புல்-சீன் ரேய் டிரேசிங் மற்றும் 144FPS கேமிங் அவுட்புட் கிடைக்கும். இந்த பீச்சர்கள் மற்றும் மே 20ஆம் தேதி வெளியாக இருப்பது மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களாக இருக்கிறது. மற்ற பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், ஐக்யூ பேட் 6 ப்ரோ (iQOO Pad 6 Pro) மே 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் 4K ரெசொலூஷன் கொண்ட 13.2 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 13000mAh பேட்டரி உள்ளது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி கொடுக்க இருக்கிறது. மேலும், ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ (iQOO TWS 5i) மாடலும் அதே மே 20ஆம் தேதியில் வெளியாக இருக்கிறது.

50 மணி நேரங்களுக்கு பேக்கப் மற்றும் 42 எம்எஸ் கேமிங் லோவ் லேட்டன்சி கொடுக்கப்பட உள்ளது. ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கிடைக்க இருக்கிறது. 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட உள்ளது.

144FPS மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட உள்ளது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 16 எம்பி கேமராவை கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15T With Q3 e-sports Gaming Chip To Launch in China on May 20 2026 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X