Home
Mobile

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. வருது புது iQOO.. எந்த மாடல்?

மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி கொண்ட மாடலாக ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தன. இப்போது, சிப்செட் விவரங்கள மீண்டும் கசிந்து, உறுதி செய்துவிட்டன.

மே மாதத்தில் சீன மார்கெட்டில் இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இப்போது, சிப்செட் விவரங்கள் மீண்டும் கசிந்துள்ளது. இதனால், பிரீமியம் பர்ஃபாமன்ஸ் கொண்ட மாடலாக இருக்கப் போவது தெரிகிறது. இந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங் மாடல்!

ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Octa Core MediaTek Dimensity 9500) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.25 எம்எம் தடிமன் உள்ளது

216 கிராம் எடை கொடுக்கிறது. 6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிளாட் டிசைனில் கிடைக்க இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி செகண்டரி கேமராவை கொடுக்கிறது. மெயின் கேமராவுக்கு சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துவிட்டன். இப்போது, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் கிடைக்க இருப்பது, சீன டெலிகாம் லிஸ்டிங் வழியாக தெரியவந்துள்ளது. ஆகவே, இது உறுதியாக கிடைக்கும்.

முன்னதாக வெளியான ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை பார்க்கையில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆகவே, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் எதிர்பார்க்கலாம்.

அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 32 எம்பி கேமரா கிடைக்கிறது. 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

144Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 144FPS கேமிங் அவுட்புட் உள்ளது. மேலும், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7600mAh பேட்டரி வருகிறது. இதைவிட பெரிய பேட்டரியை ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ரூ.46,999 விலை ஆரம்ப விலைக்கு இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.48,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. சீனாவுக்கு பிறகு இங்கு எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
iQOO 15T With Dimensity 9500 Chip Launch Soon in China New Leak Reveals Key Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X