அறிமுகமானது புதிய iQOO 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500 மான்ஸ்டர் எடிஷன் (MediaTek Dimensity 9500 Monster Edition) சிப்செட் உடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.83-இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2கே ரெசல்யூஷன் (2K Resolution) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) உடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளியாகி உள்ளது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் உள்ளன. Qingyun, ட்ராக் எடிஷன் (Track Edition) மற்றும் லெஜண்ட் எடிஷன் (Legend Edition) ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும்.
ஐக்யூ 15டி விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15டி மாடலின் விலை CNY 4,099 (இந்திய மதிப்பில் ரூ.58,000)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15டி மாடலின் விலை CNY 4,499 (இந்திய மதிப்பில் ரூ.64,000)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15டி மாடலின் விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ.68,000)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15டி மாடலின் விலை CNY 5,199 (இந்திய மதிப்பில் ரூ.74,000)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ 15டி மாடலின் விலை CNY 5,999 (இந்திய மதிப்பில் ரூ.85,000)


Click it and Unblock the Notifications