மொத்த சாம்ராஜ்யம் மிரளுது.. 200MP கேமரா, 100W சார்ஜிங், 8000mAh பேட்டரி.. புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தில் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாம், பேட்டரி, கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யத்தை மிரளவிடும்படி ஐக்யூ 15டி (iQOO 15T) வெளியாக இருக்கிறது. இப்போது, அதிகாரப்பூர்வமாக கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன மார்கெட்டில் இந்த மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகிய உடனேயே ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்தன. 200 எம்பி கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 8000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் இருந்தன. இவ்வளவு பிரீமியமாக வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆகவே, ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ஸ்மார்ட்போன் பிரியர்கள் காத்திருந்தனர்.

இப்போது, அது உண்மையாகிவிட்டது. ஐக்யூ நிறுவனமே, 200 எம்பி கேமரா, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 8000mAh பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை உறுதி செய்துவிட்டது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ஹீட் கன்ட்ரோல், ஓவர் சார்ஜ் கன்ட்ரோல் உள்ளிட்டவை கொடுக்க குளோபல் டைரெக்ட் டிரைவ் பவர் சப்ளை 2.0 (Global Direct Drive Power Supply 2.0) கொடுத்துள்ளது.
இந்த 8000mAh பேட்டரி செக்மெண்ட்டில் ஸ்லிம் மாடலாகவும் இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் இருக்க போகிறது. லார்ஜ் சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது. 4x லாஸ்லெஸ் ஜூம் (Lossless Zoom) கொடுக்கிறது. ஃபுல் போகல் லென்த் போர்ட்ராய்டு பீச்சர்களை கொடுக்க உள்ளது. பிரீமியம் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியை கொடுக்க இருக்கிறது.
இந்த பீச்சர்களுடன் முன்னதாகவே டிஸ்பிளே பீச்சர்கள் மற்றும் சிப்செட் உறுதி செய்யப்பட்டன. ஆகவே, 6.82 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளேவை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்க இருக்கிறது. கேமிங் மற்றும் டிஸ்பிளே என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க கியூ3 ஈ-ஸ்போர்ட்ஸ் சிப்செட் கிடைக்கிறது.
ஆகவே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 மான்ஸ்டர் எடிஷன் (Octa Core Dimensity 9500 Monster Edition) சிப்செட்டுடன் கூடுதலாக இந்த சிப்செட் கிடைக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 144FPS கேமிங் அவுட்புட் கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மார்கெட்டில் சில பீச்சர்கள் கசிந்துள்ளன
இதில் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. ஆகவே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது.
சீன மார்கெட்டில் மே 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆகவே, அடுத்தடுத்து பீச்சர்களை உறுதி செய்து வருகிறது. ஆகவே, அடுத்த வாரத்தில் வெளியாகி, ஓரிரு நாட்களில் விற்பனையும் தொடங்கிவிடும். பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாவது குறித்த விவரங்கள் தெரியவரும். இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் டிசைனும், ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் டிசைனும் ஒரே மாதியாக இருக்கிறது. ஆனால், கேமரா டிசைன் மட்டுமே மாறி இருக்கிறது. ஏனென்றால், ஐக்யூ 15டி பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. ஆகவே, கேமரா மற்றும கேமிங் பிரியர்களுக்கு பக்கா மாடலாக இந்த ஐக்யூ 15டி இருக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications