Home
Mobile

8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. மொத்த மார்கெட் மிரளும் iQOO 15T போன்.. எப்போது அறிமுகம்?

ஐக்யூ நிறுவனத்தின் அடுத்த மாடலான ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போனின் சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கேமரா உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்து, ஒட்டுமொத்த மார்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. எப்போது, இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும், மேலும் என்னென்ன பீச்சர்களை இதில் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏ6 அல்ட்ரா மற்றும் ரெட்மி கே90 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இந்த மாதம் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் முக்கிய பீச்சர்கள் கசிந்து, மொத்த மார்கெட்டையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. மார்கெட் மிரளது!

ஐக்யூ 15டி முக்கிய அம்சங்கள்: 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2K ரெசொலூஷனுடன் 6.82 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்டை பேக் செய்துள்ளது. ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15டி இருக்கப்போவது தெரிகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

சாம்சங் எச்பி5 சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனுடன் ஐக்யூ பேட் 6 ப்ரோ (iQOO Pad 6 Pro) மாடலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ன. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை கொண்டுள்ளது.

16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொடுக்க இருக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 13000mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. 4K ரெசொலூஷனுடன் 13.2 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது. மேன் டயோ (Man Dao), கிரே கிரிஸ்டல் (Grey Crystal) மற்றும் சில்வர் விங்க் (Silver Wing) கலர்களில் கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

ஏற்கனவே வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்த ஐக்யூ 15டி மாடலுக்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. ஆகவே, அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளாலம். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8600mAh பேட்டரியை கொடுக்கிறது. ஆகவே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்கில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா தூக்கி சாப்பிட்டிருக்கிறது.

6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ஆனால், ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் 200 எம்பி கேமரா கிடைக்க உள்ளது.

ஆகவே, கேமராவில் முந்தி இருக்கிறது. இப்போது, ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை ஒப்பிட்டு பார்க்கலாம், இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8550mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனும் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனை பின்னிக்கு தள்ளி இருக்கிறது. ஆனால், இதிலும் 50 எம்பி கேமரா மட்டுமே கிடைக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட் உள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸில் எந்த மாற்றமும் இருக்காது. எப்படி பார்த்தாலும், ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் கேமராவில் முந்துகிறது. பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் கொஞ்சம் பின் தங்கி இருக்கிறது. ஆனால், பெரிய வித்தியாசம் இல்லை. 8000mAh பேட்டரி செக்மெண்ட்டிலேயே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15T Specifications Leaked Dimensity 9500 8000mAh Battery 200MP Camera Launching Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X