Home
Mobile

8000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமராவுடன் புது iQOO போன்.. OnePlus தலையில் இன்னொரு இடி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு கடும் போட்டியாக பார்க்கப்படும் ஐக்யூ (iQOO) நிறுவனம், அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சீரிஸில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனாரோ சேர்க்க தயாராகி வருகிறது. அது ஐக்யூ 5டி (iQOO 15T) மாடல் ஆகும். ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே ஒன்பிளஸ் 15 சீரீஸிற்கு போட்டியாக பல மாடல்களை இறக்கியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ 15 (iQOO 15), ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மற்றும் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்யூ 15 சீரீஸின் கீழ் ஒரு மாடலாக வரும்.

8000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமராவுடன் புது iQOO போன்!

ஐக்யூ நிறுவனம் தனது பிளாக்ஷிப் சீரீஸில் டி மாடலை அறிமுகம் செய்வது இது முதல் முறையல்ல. 2022-ல் வெளியான ஐக்யூ 9டி (iQOO 9T) மாடல் ஆனது சீனாவில் ஐக்யூ 10 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போனின் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பாக இந்தியாவில் அறிமுகமானது. இருப்பினும், ஐக்யூ 15டி ஒரு மறுபெயரிடலாக இல்லாமல், மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: லீக் ஆன விவரங்களின்படி ,ஐக்யூ 15 மாடலில் உள்ளதை போலவே இதுவும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.82-இன்ச் 2கே டிஸ்பிளேவை பேக் செய்யலாம். மேலும், இதில் ஒரு மெட்டல் ஃபிரேம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இதன் கட்டமைப்பு தரம் இந்த சீரீஸில் உள்ள மற்ற மாடல்களுக்கு இணையாகவே இருக்கும்.

சிப்செட்டில்தான் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 சிப்செட்டிற்கு பதிலாக, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக்கின் டைமென்சிட்டி 9500 சிப்செட் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (OPPO Find X9 Series) மற்றும் விவோ எக்ஸ்300 (Vivo X300), விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு முதன்மை சிப்செட் ஆகும்.

கேமராக்கள் - ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கலாம். இந்த போனில் 200எம்பி சாம்சங் எச்பி5 ப்ரைமரி சென்சார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்யூ 15 மாடலில் உள்ள 50எம்பி ப்ரைமரி கேமராவிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றமாகும். இது தொடர்ந்து சிறந்த புகைப்படங்களை தருமா? என்று கேட்டால் - அது இதன் கேமராக்களில் செய்யப்படும் ட்யூனிங்கை பொறுத்தது. ஆனால் பேப்பரில் இது தெளிவான அப்கிரேட் ஆகும்.

ஐக்யூ 15தி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் பேட்டரியின் அளவும் - மிகவும் நடைமுறைக்கு ஏற்ற மேம்பாடாக தெரிகிறது. ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் உள்ள 7,000mAh பேட்டரியுடன் ஒப்பிடுகையில், ஐக்யூ 15டி மாடலில் பேட்டரி திறன் 8,000mAh-ஐ தாண்டும் என வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் சார்ஜிங் ஸ்பீட் ஆனது 100W வயர்டு சார்ஜிங்காகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக ஐக்யூ 15 சீரீஸில் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் ஆனது எளிதாக அதிக நேரம் நீடிக்கும் போனாக இருக்கக்கூடும். ஆனாலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் நார்ட் 6 வழியாக ஒன்பிளஸ் நிறுவனம் 9000mAh பேட்டரியை கொண்டு வந்துள்ளது. இது ஐக்யூ நிறுவனத்திற்கு சற்று நெருக்கடி கொடுக்கலாம். ஆனால் விலை வரம்ப விஷயத்தில் ஐக்யூ வழக்கம் போல ஒன்பிளஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும்.

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் உத்தேச விலை வரம்பு: வழக்கப்படி, மீடியாடெக்கின் உயர்தர சிப்களை கொண்ட போன்கள், அவற்றின் ஸ்னாப்டிராகன் மாடல்களை விட சற்றே குறைந்த விலையில் வருகின்றன. ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனிலும் நாம் இதே அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்.

ஐக்யூ 15ஆர் (ரூ.44,999 ) மற்றும் ஐக்யூ 15 (ரூ.72,999) ஆகியவற்றுக்கு இடையேயான விலை வித்தியாசம் மற்றொரு போனை அறிமுகப்படுத்த போதுமானதாக இருப்பதால், ஐக்யூ 15டி அந்த இடத்தை நிரப்பலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15T Specifications Dimensity 9500 200MP camera 8000mAh battery leaked Check Out Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X