Home
Mobile

உடம்ப இரும்பாக்கிகோ டா OnePlus.. 16GB ரேம், 8000mAh பேட்டரி, 200MP கேமரா உடன் புது iQOO போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 13 க்கு போட்டியாக ஐக்யூ 13 அறிமுகமான காலத்தில் இருந்தே இவ்விரு நிறுவனங்களுமே - ஒன்றுக்கு ஒன்று சலித்தது அல்ல என்று கூறும்படியாக.. போட்டிபோட்டுக்கொண்டு மாற்றி மாற்றி புதிய ஸ்மார்ட்போன்களை (அதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாடல் பெயரில்) அறிமுகம் செய்வது தொடர்கிறது.

அந்த வரிசையில் இப்போது ஐக்யூ நிறுவனத்திடம் இருந்து ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாடல் பெயரை வைத்தே இந்நேரம் இது எந்த ஒன்பிளஸ் மாடலுக்கான போட்டி என்பதை இந்நேரம் நீங்கள் கணித்து இருப்பீர்கள். அது ஒன்பிளஸ் 15டி-க்கு (OnePlus 15T) எதிராக களம் இறங்குகிறது.

16GB ரேம், 8000mAh பேட்டரி, 200MP கேமரா உடன் புது iQOO போன்!

சீனாவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகமான மாடல் விரைவில் இந்தியா உட்பட மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரவுள்ளதால்.. ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்த சந்தையிலும், ஒன்பிளஸ்-க்கு எதிராக சலசலப்புகளை கிளப்பும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் "பல முரட்டு அம்சங்களின்"காம்பினேஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது, சீனாவில் வெளியிடுவதற்கான தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. அதன்வழியாக ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் அனைத்து முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.83-இன்ச் 2கே ஓஎல்இடி பிளாட் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட்,
- 200-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 50-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 100W சார்ஜிங் ஆதரவு கொண்ட 8000mAh பேட்டரி

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் மூன்று எடிஷன்கள்: முக்கிய அம்சங்கள் ஒருபக்கம் இருக்க, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் ஆனது 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் என்றும், இது கிங்யுன், லெஜண்ட் மற்றும் ட்ராக் என்கிற 3 எடிஷன்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள்:
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- முழுமையான நீர் எதிர்ப்பு திறன் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் டிசைன்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- 8K வீடியோ ரெக்கார்டிங்
- வைஃபை 7, புளூடூத் 5.4ஆதரவு
- ஒரு எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்

இருப்பினும், ஐக்யூ நிறுவனம் அதன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே (கடந்த மே 7 ஆம் தேதி முதல்) தொடங்கிவிட்டது. அதிகாரப்பூர்வ டீசர்கள் இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் ஸ்லிம் ஆன டிசைன் மற்றும் ரியர் கேமரா மாட்யூலை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளது.

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் விலை: ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உள்ள 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) சுமார் ரூ.67,000, ரூ.63,000 மற்றும் ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஆக அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக வெளியானதால், ஒன்பிளஸ் 15டி ஆனது ஒன்பிளஸ் 15எஸ் ஆக இங்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15T Full Specifications 3 Editions Leaked Looks Like New Big Competitor For OnePlus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X