மே 20 உறுதி.. 200எம்பி கேமரா.. 8000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது புதிய iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ 15டி (iQOO 15T) ஸ்மார்ட்போன் வரும் மே 20-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட் உடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6.82-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED screen) வசதியுடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் (144Hz refresh rate), 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), வசதிகளுடன் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இந்த போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Q3 கேமிங் சிப் கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இந்த போனில் உள்ளது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஐக்யூ 15டி போன் வெளியாகும். மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
photos credits: gizmochina, 91mobiles


Click it and Unblock the Notifications