200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. கதி கலங்கும் OnePlus.. புது iQOO கொம்பன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15 மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கும் ஐக்யூ 5டி (iQOO 15T) மாடலின் போஸ்டர் அதிகராப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. 200 எம்பி கேமரா, 8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சீன மார்கெட்டில் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் தொடங்கி இருக்கிறது. ஆகவே, இந்த மாதத்துக்குள் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனுடன் ஐக்யூ பேட் 6 ப்ரோ (iQOO Pad 6 Pro) மற்றும் ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ (iQOO TWS 5i) ப்ரொடெக்ட்களும் வெளியாக இருக்கின்றன.

இந்த மாடல்களுக்கான ரிசர்வேஷன்களும் சீன மார்கெட்டில் தொடங்கிவிட்டன. ஆகவே, அதிகாரப்பூர்வ போஸ்டர்களை ஐக்யூ சீனா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனில் கிடைத்த டிசைனை ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் பார்க்க முடிகிறது. பிளாட் டிஸ்பிளே டிசைன் மற்றும் மெட்டாலிக் ஃபிரேம் கிடைக்கிறது.
மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. ஆனால், ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ மாடலில் 50 மணி நேரங்களுக்கான பேக்கப் மற்றும் 42 எம்எஸ் கேமிங் லோவ் லேட்டன்சி கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள், ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன.
ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைக்கிறது. 200 எம்பி பிரைமரி கேமரா கிடைக்க இருக்கிறது.
இந்த கேமராவுக்கு சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்க இருக்கிறது. மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
மேலும், 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் இருக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. ஐபி68 ரேட்டிங் மற்றும் ஐபி69 ரேட்டிங் கிடைக்கிறது. எக்ஸ்-ஆக்சிஸ் லீயர் மோட்டார் (X-axis Linear Motor) கிடைக்கிறது. ரூ.57,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
ஐக்யூ பேட் 6 ப்ரோ அம்சங்கள் (iQOO Pad 6 Pro Specifications): ஸ்லிம் டிசைனில் சர்குலர் கேமரா டிசைனுடன் வர இருக்கிறது. 13.2 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே, 4K ரெசொலூஷன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க உள்ளது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் 13000mAh பேட்டரி உள்ளது.
ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ அம்சங்கள் (iQOO TWS 5i Specifications): இன்-இயர் டிசைனில் கிடைக்க இருக்கிறது. பிளாக் மற்றும் கோல்டு ஷேட் கொண்ட சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. இயர்பட்கள் பிளாக் கலரில் உள்ளன. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் உள்ளது. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்க உள்ளது. 42 எம்எஸ் கேமிங் லோவ் லேட்டன்சி கிடைக்க உள்ளது. விலை விவரங்கள் விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications