Home
Mobile

பழசு காலி.. மிரட்ட வருது புதுசு.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 16GB ரேம்.. புது iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் வெளியாகிவிட்டன. 200 எம்பி கேமரா, 8000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற மே 20ஆம் தேதி இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் மட்டும் வெளியாகிறது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஏற்கனவே, ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களில் இருந்து என்ன அப்கிரேட் ஐக்யூ 15டி மாடலில் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

பழசு காலி.. மிரட்ட வருது புதுசு.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி!

ஐக்யூ 15டி அம்சங்கள் (iQOO 15T Specifications): 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 2K+ ரெசொலூஷன் கிடைக்கிறது. பிஓஇ கி10பிளஸ் (BOE Q10+) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஒர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 16 எம்பி கேமராவை இந்த ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூஎஸ்பி-டைப் சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.25 எம்எம் தடிமன் மற்றும் 216 கிராம் எடை கொடுக்கிறது. டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கசிந்த பீச்சர்களாக இருக்கிறது.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆகவே, ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனைவிட கூடுதல் ரெசொலூஷன் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கம், பெரிய மாற்றம் இருக்காது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற ஸ்டெபிலிட்டி கிடைக்கும். கேமராவில் அப்கிரேட் இருக்கிறது. ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி + 8 எம்பி கேமரா கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

ஆனால், ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனில் 200 எம்பி + 50 எம்பி கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. அதேபோல ஐக்யூ 15ஆர் மாடலில் 7600mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, பேட்டரியிலும் ஐக்யூ 15டி ஸ்மார்ட்போன் முந்துகிறது. மற்ற பீச்சர்களில் பெரிய மாற்றம் இல்லை. டிஸ்பிளேவிலும் ஐக்யூ 15டி பெரிதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15T 200MP Camera 8000mAh Battery To Launch on May 20 What differs From iQOO 15R
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X