Home
Mobile

7600mAh பேட்டரி.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 144 Hz AMOLED டிஸ்பிளே.. முரட்டு iQOO போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, குளோபல் வேரியண்ட்டின் சிப்செட், கிராபிக்ஸ் கார்டு ரேம் மற்றும் ஓஎஸ் விவரங்கள் கசிந்துள்ளது. இது அப்படியே ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) போனின் ரீபிராண்ட் வெர்ஷனை போலவே இருக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

சீன மார்கெட்டில் கடந்த வாரம் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளியாகியது. 200 எம்பி கேமரா, 7600mAh பேட்டரி போன்ற முரட்டு பீச்சர்களை கொடுத்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆகவே, இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் & இந்திய மார்கெட்டில் ஒரே மாடலாகவே ஐக்யூ போன்கள் வருகின்றன.

7600mAh பேட்டரி.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே மாடல்!

ஆகவே, ஐக்யூ 15ஆர் மாடலாக குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளயாக இருப்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் அமேசான் மற்றும் ஐக்யூ இந்தியா தளங்களில் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் போஸ்டர் வெளியாகியது. அதில் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்தால், ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனின் டிசைன் தெரிகிறது.

இந்த நேரத்தில் அதை உறுதிபடுத்தும் விதமாக குளோபல் வேரியண்ட்டின் சிப்செட் பீச்சர்கள் Geekbench வழியாக கசிந்துள்ளது. ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனில் கிடைத்த அதே சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு இதிலும் இடம்பெற்றுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) வருகிறது.

மேலும், 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஸ் 6 (OriginOS 6) கிடைக்க உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே Geekbench வழியாக கசிந்துள்ளன. ஆகவே, ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய மார்கெட்டில் ஓரிரு நாட்களில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட உள்ளன.

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 300 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுத்துள்ளது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவை கொடுத்துள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7600mAh பேட்டரி கிடைத்துள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.35,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் இதே பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R With Snapdragon 8 Gen 5 Chipset Launching Soon in India Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X