Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OIS கேமரா.. 4 OS அப்கிரேட்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) போன்ற பிரீமியம் சிப்செட் கொண்ட மிட்-ரேஞ்ச் மாடலாகவும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், 7600mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களை கொடுத்துள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R), மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) போன்ற ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கிடைக்கிறது. ஆனால், இந்த மாடல்களின் விலை ரூ.50,000 பட்ஜெட்டுக்கும் மேல் இருக்கிறது. இதே சிப்செட்டுடன் பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐக்யூ 15ஆர் மாடலானது ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்க உள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்பதை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இதனால், அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸை மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு பெற்று கொள்ளலாம். இப்படி ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144 எப்பிஎஸ் கேமிங் ஃபிரேம் ரேட் கிடைக்க உள்ளது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) இந்த டிஸ்பிளேவில் வருகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், கூடுதலாக கியூ 2 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் (Q2 Supercomputing Chip) கிடைக்கிறது. கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க இந்த சிப்செட் கிடைக்கிறது. மேலும், நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் (Network Enhancement Chip) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 3 சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மதர்போர்டுக்கு நேரடியாக பவர் செல்லும்படி பைபாஸ் சார்ஜிங் (Bybass Chaging) கிடைக்கிறது. 7600mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6.5K ஐஸ்கோர் விசி கூலிங் சிஸ்டம் (IceCore VC Cooling System) கிடைத்துள்ளது. 7600mAh பேட்டரியுடன் ஸ்லிம் மாடலாகவும் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒன்-டேப் டிராஸ்பர், ஓர்ஜின் ஐலேண்ட் போன்ற பிரத்யேக பீச்சர்களையும் இந்த ஓர்ஜின்ஓஎஸ் 6 கொடுத்து இருக்கிறது.

இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 200 எம்பி கேமரா கிடைத்தது. ஆனால், இந்தியாவில் 50 எம்பி கேமராவுடன் வெளியாக இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட உள்ளது.

பிளாக் மற்றும் சில்வர் கலர்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 202 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது. ஏற்கனவே ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால், ரூ.49,999 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. 12 ஜிபி ரேம் மாடலும் கிடைக்கலாம். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கப் போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R With Snapdragon 8 Gen 5 Chipset 7600mAh Battery Launching on February 24 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X