iQOO ஒரே போடு.. 23 சதவீத ஆஃபரில் 100W சார்ஜிங், 7600mAh பேட்டரி.. 50MP SONY கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஸ்லிம் ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஆனால், இதில் பெரிய பேட்டரி எதிர்ப்பார்க்க முடியாது. இருப்பினும், ஒரு சில மாடல்கள் பெரிய பேட்டரியுடன் ஸ்லிம் பாடியில் கிடைக்கின்றன. இதில் 7600mAh பேட்டரியுடன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் கொடுக்கும் மாடலாக ஐக்யூ 15ஆர் (iQOO 15R) வெளியாகியது.
இப்போது, அமேசான் தளத்தில் 23 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.53,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,619 தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

7600mAh பேட்டரி கொண்ட மாடலாக இருந்தாலும், வெறும் 7.9 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் கிடைக்கிறது. டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். இதில் டார்க் நைட் வேரியண்ட் மட்டுமே 7.9 எம்எம் தடிமனில் கிடைக்கும். டிரையம்ப் சில்வர் வேரியண்ட் 8.1 எம்எம் தடிமனில் கிடைக்கிறது.
ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கிடைக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங மற்றும் 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.
4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதுபோக 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) பேக் செய்யப்பட்டு இருக்கிறது. 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 144FPS கேமிங் போன்ற கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும் பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1.5K ரெசொலூஷன் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்காட் ஷீல்டு கிளாஸ் (Schott Shield Glass) டிஸ்பிளே புரொடெக்சன் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது.


Click it and Unblock the Notifications
