7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. ரூ.4,000 ஆஃபர் விலை.. அமேசான் சம்மர் சேலில் iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் (Amazon Great Summer Sale) முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட இருக்கிறது. இதில் ரூ.4,000 தள்ளுபடி விலையில் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இப்போது, ரூ.2,000 தள்ளுபடி மட்டுமே கிடைக்கிறது. மே 8ஆம் தேதி முதல் கூடுதல் தள்ளுபடி கிடைக்க இருக்கிறது.
வருகிற மே 8ஆம் தேதி அமேசான் கிரேட் சம்மர் விற்பனை தொடங்குகிறது. இந்த விற்பனையில் ரூ.46,999 விலை கொண்ட ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.42,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இப்போது, ரூ.2,000 தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.44,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இந்த விலைக்கு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.50,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.57,999ஆக இருக்கிறது. இந்த மாடல்களுக்கும் ரூ.4,000 தள்ளுபடி எதிர்பார்க்கலாம். மே 8ஆம் தேதி முதல் அமேசானில் ஆர்டர் செய்யலாம்.
டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய 2 கலர்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. 6500 எம்எம் ஐஸ்கோர் விசி கூலிங் (IceCore VC Cooling), டூயல் லேயர் கிராஃபைட் சீட் (Dual-Layer Graphite Sheet) கிடைக்கிறது. 5 சதவீத கூடுதல் சிக்னல் கொடுக்க நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ 15ஆர் முக்கிய அம்சங்கள்: எப்/1.88 அபெர்சர், சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V), ஓஐஎஸ் டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா + எப்/2.2 அர்பெர்சருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெசர் மற்றும் 4K ரெக்கார்டிங்குடன் 32 எம்பி கேமரா கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) ப்ராசஸர் உள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன.
ஸ்காட் ஷீல்டு கிளாஸ் (Schott Shield Glass) புரொடெக்சனுடன் 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 144FPS கேமிங் அவுட்புட் உள்ளது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளது.
இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைத்துள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7600mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications