Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7.9 மிமீ பாடியில் 7600mAh பேட்டரி.. 200MP மெயின் கேமரா.. 144 FPS டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனின் பட்ஜெட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 7.9 எம்எம் தடிமனில் 7600mAh பேட்டரி மட்டுமல்லாமல், 200 எம்பி கேமரா, 144 எப்பிஎஸ் டிஸ்பிளே பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் பட்ஜெட் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்னதாக சிப்செட், பேட்டரி, ஓஎஸ், டிஸ்பிளே மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது பட்ஜெட் விவரமும் அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.50,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7.9 மிமீ பாடியில் 7600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, ரூ.47,999 ஆரம்ப விலைக்கு இந்தியாவில் எதிர்பார்க்கலாம். சொல்லப்போனால், இந்த விலை ஐக்யூ 13 ஸ்மார்ட்போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட மலிவாக இருக்கிறது. ஏனென்றால், ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரிண்ட்டியின் விலை ரூ.54,999ஆக இருந்தது. ஆனால், இந்த ஐக்யூ 15ஆர் அதைவிட மலிவான விலைக்கு வர உள்ளது.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், கியூ2 சூப்பர்கம்ப்யூட்டிங் கேமிங் சிப் மற்றும் நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க உள்ளது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் வருவதால், ஒன்-டேப் டிரான்ஸ்பர் (One-Tap Transfer), ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), கிராஸ்-டிவைஸ் ஃபைல் டிரான்ஸ்பர் (Cross-Device File Transfer) கிடைத்துள்ளது.

1.5K கேமிங் சூப்பர் ரெசொலூஷன், 144 FPS கேமிங் ஃபிரேம் மற்றும் 20 சதவீத லோயர் செல்லூலார் கேமிங் லேட்டன்சி கொண்ட டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 7600mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், சீனாவில் வெளியான ஐக்யூ இசட்11 டர்போவின் (iQOO Z11 Turbo) மாடலின் ரீபிராண்ட் வெர்ஷனாக இது இருக்கிறது.

ஆகவே, மற்ற பீச்சர்களையும் அந்த மாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன், 144 Hz ரெசொலூஷன் மற்றும் 300 Hz டச் சாம்பிளிங் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. மேலும், எச்டிஆர்10பிளஸ், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

200 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 7600mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது.

IP68 + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் (3D Ultrasonic Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இதே பீச்சர்களை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு முன்பாக இந்த பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R With 7600mAh Battery To Launch Under Rs 50000 on Feb 24 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X