7600mAh பேட்டரி, 100W சார்ஜிங், 12GB ரேம்.. முரட்டு காம்பினேஷனில் புது iQOO போன்.. ரூ.4000 ஆபர் விலையில் SALE!
ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆக ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மாடல் இன்று (பிப்ரவரி 24 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஐக்யூ 15 மாடலுடன் அமர்ந்து ஐக்யூ 15 சீரீஸின் கீழ் இணைகிறது. என்ன விலை? எப்போது விற்பனை? என்னென்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஐக்யூ 15ஆர் விலை: இந்தியாவில் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB RAM மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆப்ஷனிலும் வருகிறது. இதன் விலைகள் முறையே ரூ.47,999 மற்றும் ரூ.52,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ 15ஆர் விற்பனை: ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டார்க் நைட் மற்றும் ட்ரையம்ப் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது அமேசான் இந்தியா மற்றும் ஐக்யூ இந்தியா ஸ்டோர் மற்றும் விவோ ரீடெயில் விற்பனை கடைகள் மூலம் இன்று (பிப்.24) மதியம் 1 மணி முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும்.
ஆரம்பகால வாங்குபவர்களுக்கு (Early buyers) ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் வாங்க கிடைக்கும், அதே நேரத்தில் பொது விற்பனை (General Sale) ஆனது 2026 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
ஐக்யூ 15ஆர் ஆபர்: அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கிரெடிட், டெபிட் மற்றும் இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளில் ரூ.4,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடியை பெறலாம். கூடவே ஐக்யூ நிறுவனம் ஆனது ஐக்யூ 15ஆட் உடன் ரூ.1,899 மதிப்புள்ள ஐக்யூ / விவோ டிடபுள்யூஎஸ் (iQOO / Vivo TWS) மாடலையும் தொகுக்கிறது.
ஐக்யூ 15ஆர் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ சான்றிதழ் மற்றும் 4,320Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆதரவையும் கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிரேம் இண்டர்போலேஷன் வழியாக கேமிங்கின் போது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அட்ரெனோ 826 ஜிபியு (Adreno 826 GPU) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-700V ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது, இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடைசியாக, அளவீடுகளில் இது 157.61 x 74.42 x 7.90மிமீ மற்றும் எடையில் 202 கிராம் (டார்க் நைட் வேரியண்ட்) உள்ளது.


Click it and Unblock the Notifications