Home
Mobile

பிப்.24 குறிச்சாச்சு.. 144Hz டிஸ்பிளே.. 7600mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் புதிய மாடலான ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதியாகி உள்ளன. ஏற்கனவே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்கள் உறுதியாகி மார்கெட்டில் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. இப்போது பிரீமியம் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற டிஸ்பிளே மாடலாகவும் இருக்கிறது.

இந்தியாவில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. டிசைன், கேமரா, சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் அமேசான் தளத்தில் உறுதியாகி வருகின்றன. இப்போது, டிஸ்பிளே பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்க இருப்பது தெரிகிறது.

பிப்.24 குறிச்சாச்சு.. 144Hz டிஸ்பிளே.. 7600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. முந்தைய வெர்ஷன்களை போலவே பிளாட் டிஸ்பிளே டிசைன் உள்ளது.

144FPS கேமிங் அவுட்புட் கொண்ட மாடலாகவும் இந்த ஐக்யூ 15ஆர் இருக்கிறது. டிஸ்பிளே அவுட்புட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி கியூ 2 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் (Q2 Supercomputing Chip) கிடைக்கிறது. அதேபோல நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் (Network Enhancement Chip) கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 6.5K ஐஸ்கோர் விசி கூலிங் சிஸ்டம் (IceCore VC Cooling System) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7600mAh பேட்டரியை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கேமிங் மாடலாக இருப்பதால், ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

16.3 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். 3.1 மணி நேரங்களுக்கு கேமிங் பிளேபேக் கிடைக்கும். 2.4 மணி நேரங்களுக்கு 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கும். சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி வருகிறது.

இந்த கேமராவில் என்ஐசிஇ கேமரா அல்கோரிதம் கிடைக்கிறது. மேலும், சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. அல்ட்ரா சோனிக் 3டி ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic 3D Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டி உள்ளது.

ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), என்எப்சி (NFC) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R With 144Hz Refresh Rate 5000 Nits Peak Brightness Launching on February 24 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X