நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது iQOO 5ஜி போன்.. 7600mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15ஆர் (iQOO 15R) நாளை (பிப்ரவரி 24) அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதன்பின்பு அமேசான் வழியாக இந்த புதிய போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): சக்திவாய்ந்த 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஐக்யூ 15ஆர் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன். 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவரும். மிட்நைட் பிளாக், ஸ்கை ஒயிட், ஃப்ளோட்டிங் லைட், ஹாலோ பிங்க் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
அதுவும் 50எம்பி Sony LYT பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh பேட்டரி உடன் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளுடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மூலம் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.47,999 விலையில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








