இந்தியாவையே மிரள விட போகும் iQOO.. 7600mAh பேட்டரி.. 200MP கேமரா.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தற்போது புதிய டீசரை வெளியிட்டுள்ளது. அதில் புதிய ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்த மாதம் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனை போலவே உள்ளது ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன். ஆகவே ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஐக்யூ 15ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஐக்யூ இசட்11 டர்போ போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஐக்யூ இசட்11 டர்போ அம்சங்கள் (iQOO Z11 Turbo Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஐக்யூ இசட்11 டர்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன். 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவந்துள்ளது. மிட்நைட் பிளாக், ஸ்கை ஒயிட், ஃப்ளோட்டிங் லைட், ஹாலோ பிங்க் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
அதுவும் 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மேலும் 7600எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளுடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
சீனாவில் ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் ரூ.34,960 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் மாடலும் இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








