Home
Mobile

தூக்குங்க.. iQOO 15R விலை இவ்ளோதானா.. 16GB ரேம், 200MP கேமரா, 100W சார்ஜிங், 7600mAh பேட்டரி!

ஐக்யூ (iQOO) நிறுவனம் வருகிற பிப்ரவரி மாதம், ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அது ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மாடல் ஆகும். இது வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக மைக்ரோசைட் நேரலைக்கு வந்து - சிப்செட் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (iQOO 15R Price) குறித்த விவரங்கள் லீக் ஆகி உள்ளன.

தூக்குங்க.. iQOO 15R விலை இவ்ளோதானா.. 16GB ரேம், 200MP கேமரா!

ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 சீரீஸ் சிப்செட்டால் (Octa core Snapdragon 8 Gen 5 chipset) இயக்கப்படும் என்பதும், அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக குறிப்பிட்ட மைக்ரோசைட்டில் ஐக்யூ 15ஆர் மாடலுக்கான விலை வரம்பையும் காட்டுகிறது.

அதன்படி ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.55,000 க்கும் குறைவான விலைப்பிரிவில் வாங்க கிடைக்கும் மிகவும் வேகமான ஸ்மார்ட்போன் (Fastest smartphone under Rs.55,000 price segment) ஆகும். ஆக ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த டிசம்பர் 2025 இல் இந்தியாவில் ரூ.47,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமான ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) உடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- IP68 + IP69 ரேட்டிங்
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,600mAh பேட்டரி

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே அமோல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகிய டிஸ்பிளே அம்சங்களும் உள்ளன.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் ஆகும். 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உயர்நிலை சிப்செட் ஆனது சிபியு, ஜிபியு மற்றும் சிறந்த வேகம் மற்றும் ஆற்றல் மேலாண்மை உள்ளிட்ட பொதுவான செயல்திறனில் குறிப்பிடத்தக்க ஆதாயங்களை வழங்குகிறது.

இமேஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செய்யப் 30fps மற்றும் 120fps இல் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh என்கிற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இது - இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16 (OxygenOS 16) கொண்டு இயங்குகிறது. ஐபி ரேட்டிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது உயர்மட்ட IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R Price Range in India Leaked Ahead February 24 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X