Home
Mobile

சம்பவம் செய்த ஐக்யூ.. 7600எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஐபி69 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், 7600எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஐக்யூ 15ஆர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சம்பவம் செய்த ஐக்யூ.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம்(Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனால் 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி Sony LYT-700V பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும்.

3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பாக வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சம்பவம் செய்த ஐக்யூ.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

7600எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ 15ஆர் போனின் விலை ரூ.44,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.47,999-விலையிலும், இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.52,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், iQOO.com தளங்களில் வரும் மார்ச் 3-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும். இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R launched in India: check sale date, specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X