Amazon அமோகம்.. ரூ.4000 தள்ளுபடி விலையில் 7600mAh பேட்டரி iQOO 5ஜி போன்.. 12GB ரேம், IP69.. எந்த மாடல்?
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது அதன் கிரேட் சம்மர் சேல் (Great Summer Sale) ஆனது வருகிற மே 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. மே 8 ஆம் தேதிக்கு முன்பாக, பிரைம் மெம்பராளுக்கு (Prime Members) 12 மணிநேர முன்கூட்டிய அணுகலும் வழங்கப்பட உள்ளது
இதற்கிடையில் இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, 2 லேட்டஸ்ட் ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்பதை அமேசான் தளம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த மாடல்கள் - ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மற்றும் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஆகும்.

ஐக்யூ நியோ 10 மீதான சலுகை: இந்த விற்பனையின் போது, ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் ஆனது வங்கி சலுகையுடன் சேர்த்து ரூ.34,999 க்கு கிடைக்கும். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது ஒரு புதிய போன் அல்ல; இது மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஐக்யூ நியோ 10 தான். இப்போது ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய 2 புதிய கலர்களில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
அறிமுக விலையிலிருந்து ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,999 க்கு வாங்க கிடைத்தாலும் கூட - இன்னமும் இதன் ஹார்ட்வேர் - கேமிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு பெஸ்ட் ஆப்ஷன் ஆகவே உள்ளடது. இந்த விலையில் புதிய மாடல்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், நத்திங் ஃபோன் 4ஏ ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் நார்ட் 6 ஆகியவைகள் அதிக கேமரா பன்முகத்தன்மையை வழங்குகின்றன.
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் மீதான சலுகை: பிப்ரவரி 2026 இல் ரூ.44,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது, ஏப்ரல் மாதத்தில் ரூ.46,999 ஆக விலை உயர்ந்தது. தற்போது அமேசான் விற்பனையின் போது ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது - இது அதன் அறிமுக விலையை விட ரூ.2,000 குறைவாகவும், தற்போதைய விற்பனை விலையை விட ரூ.4,000 குறைவாகவும் உள்ளது.
ரூ.42,999 என்கிற விலையில், இது விவோ வி70 மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் உடன் போட்டியிடுகிறது. கேமிங் விஷயத்தில் ஐக்யூ 15ஆர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. பெரும்பாலான பிராண்டுகள் விலையை உயர்த்தும் ஒரு காலகட்டத்தில், இதை அதன் அறிமுக விலையை விட குறைவான விலைக்கு பெறுவது ஒரு டீசண்ட் ஆன சான்ஸ் ஆகும்.
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், HDR10+ சான்றிதழ் மற்றும் 4,320Hz PWM டிம்மிங் ரேஷியோ ஆதரவையும் கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிரேம் இண்டர்போலேஷன் வழியாக கேமிங்கின் போது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அட்ரெனோ 826 ஜிபியு (Adreno 826 GPU) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-700V ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டுள்ளது, இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் (2800×1260 பிக்சல்ஸ்) 1.5கே AMOLED டிஸ்பிளே
- அட்ரினோ 825 GPU உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 1/1.95″ சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்ச்சர், OIS, LED ஃபிளாஷ் கொண்ட 50MP ப்ரைமரி கேமரா
- GC08A3-WA1XA சென்சார் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (எப்/2.2 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)
- 32MP செல்பீ கேமரா (எப்/2.45 அபெர்ச்சர், 4K 60 fps வரை வீடியோ பதிவு)
- தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 7000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications