Home
Mobile

ஒன்பிளஸ், மோட்டோவை வெடவெடத்து போக வைத்த புதிய போன்.. பிப்.24 அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

வரும் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியாவில் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும். இந்நிலையில் ஐக்யூ 15ஆர் போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் 7600mAh பேட்டரி உடன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

ஒன்பிளஸ், மோட்டோவை வெடவெடத்து போக வைத்த புதிய போன்.. பிப்.24 அறிமுகம்!

புதிய ஐக்யூ 15ஆர் போன் 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன். 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவரும். மிட்நைட் பிளாக், ஸ்கை ஒயிட், ஃப்ளோட்டிங் லைட், ஹாலோ பிங்க் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

அதேபோல் 200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

ஒன்பிளஸ், மோட்டோவை வெடவெடத்து போக வைத்த புதிய போன்.. பிப்.24 அறிமுகம்!

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளுடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.50,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புதிய போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R India price And Specification revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X