Home
Mobile

புது போன் வாங்குறதை எல்லாம் பிப்.24 வரை தள்ளி போடுங்க! 7600mAh பேட்டரி.. வருகிறது புது iQOO போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15ஆர்(iQOO 15R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ இசட்11 டர்போ (iQOO Z11 Turbo) ஸ்மார்ட்போனை போலவே உள்ளது ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன். ஆகவே ஐக்யூ இசட்11 டர்போ ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஐக்யூ 15ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

புது போன் வாங்குறதை எல்லாம் பிப்.24 வரை தள்ளி போடுங்க!

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் உடன் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஐக்யூ 15ஆர் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டிசி டிம்மிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன். 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவரும். மிட்நைட் பிளாக், ஸ்கை ஒயிட், ஃப்ளோட்டிங் லைட், ஹாலோ பிங்க் நிறங்களில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

புது போன் வாங்குறதை எல்லாம் பிப்.24 வரை தள்ளி போடுங்க!

7600mAh பேட்டரி உடன் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளுடூத் 6.0, ஜிபிஎஸ், குளோனாஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ 15ஆர் போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Image Credit: Weibo/ @iQOO phone

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15R India Launch Date confirmed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X