Home
Mobile

வெளுத்து கட்டும் அமேசான்.. ரூ.4,250 ஆஃபரில் 7600mAh பேட்டரி iQOO போன்.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

அமேசான் தளத்தில் நடக்கும் மெகா டீல் டேஸ் (Mega Deal Days) விற்பனையில் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனானது கூப்பன் டிஸ்கவுண்ட், பேங்க் டிஸ்கவுண்ட் போக கம்மி விலைக்கு கிடைக்கிறது.

ஜூன் 9ஆம் தேதி வரையில் நடக்கும் அமேசான் மெகா டீல் டேஸ் விற்பனையில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் ரூ.46,998ஆக இருக்கிறது. இதில் நேரடியாக ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.2,250 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,748 விலைக்கு வாங்கலாம்.

வெளுத்து கட்டும் அமேசான்.. ரூ.4,250 ஆஃபரில் 7600mAh பேட்டரி iQOO போன்!

ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த கிரெடிட் கார்டுகள் இல்லாமல் போனாலும், ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும், ரூ.36,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் இந்த ஐக்யூ 15ஆர் மாடலுக்கு பெறலாம்.

ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது.

4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டை கொடுத்துள்ளது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்ட மாடலாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சாருடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்காட் ஷீல்டு கிளாஸ் (Schott Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். 1.5K ரெசொலூஷன், 144FPS கேமிங் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. 6500 எம்எம் ஐஸ்கோர் விசி கூலிங் (IceCore VC Cooling) கிடைக்கிறது. மேலும், டூயல் லேயர் கிராஃபைட் சீட் (Dual-Layer Graphite Sheet) வருகிறது.

நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
iQOO 15R Gets Rs 4250 Discount in Amazon Mega Deal Days Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X