Home
Mobile

பிரிச்சி விட்டாப்ல சார்.. 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் ஐக்யூ 15ஆர் 5ஜி (iQOO 15R 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, லேட்டஸ்ட் கான்பிகிரேஷன்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. 7600mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஐக்யூ 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தரமான சிப்செட், பெரிய பேட்டரி மற்றும் பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுடன் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பக்கா மாடலாக இந்த ஐக்யூ 15ஆர் 5ஜி வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த தளத்தில் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இப்போது, விலை விவரங்கள் கசிந்துள்ளன.

பிரிச்சி விட்டாப்ல சார்.. 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. மாடல்?

முன்னதாக ஆரம்ப விலையே ரூ.50,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.45,000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பது தெரியவருகிறது. டிப்ஸ்டர் PassionateGeekz வழியாக இப்போது கான்பிகிரேஷன் மற்றும் விலைகள் கசிந்துள்ளன. அதன்படி 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கப் போகிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.52,999 ஆக இருக்கிறது. மேலும், அறிமுக சலுகைகள் போக கிட்டத்தட்ட ரூ.40,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனாலேயே மிட்-ரேஞ்ச் பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர்.

ஐக்யூ 15ஆர் 5ஜி அம்சங்கள் (iQOO 15R 5G Specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த ஐக்யூ 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், கேமிங் அவுட்புட்டுக்கு கியூ2 சூப்பர்கம்ப்யூட்டிங் (Q2 Supercomputing) சிப்செட் வருகிறது. மேலும், சீம்லெஸ் கனெக்டிவிட்டிக்காக நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் சிப் (Network Enhancement Chip) கிடைக்க உள்ளது.

பிளாட் டிஸ்பிளே டிசைனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144FPS கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், லோயர் செல்லூலார் கேமிங் லேட்டன்சி (Lower Cellular Gaming Latency) கிடைத்து உள்ளது.

6.5K ஐஸ்கோர் விசி கூலிங் சிஸ்டம் (IceCore VC Cooling System) கிடைக்கிறது. 10 நிமிடங்களில் 15 டிகிரி செல்சியஸ் வரையில் டிராப் கிடைக்கும். 7600mAh பேட்டரி மற்றும் 100W ஃபிளாஷ்சார்ஜ் (FlashCharge) கிடைக்கிறது. இந்த பேட்டரி கேபாசிட்டியுடன் கிடைக்கும் இந்தியாவில் ஸ்லிம்மஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக ஐக்யூ 15ஆர் 5ஜி மாடல் இருக்கிறது.

மேலும், அட்வான்ஸ் பைபாஸ் சார்ஜிங் கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்டுள்ளது.

இந்த கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுக்க இருப்பது தெரிகிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15R 5G Price With Configurations Leaked Ahead of Launch in India on February 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X