நவ.26-க்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. மாடல்?
ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. ஓர்ஜின் ஓஎஸ் 6 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் 100X ஜூமிங் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருப்பதால் ஒட்டுமொத்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் நவம்பர் மாதம் வெளியாகும் என்று சீனாவில் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாகிய போதே கூறப்பட்டது. ஆனால், தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, அதில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியது.

இப்போது, நவம்பர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருப்பதை ஐக்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) ஆகிய பீச்சர்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை.
நவம்பர் மாதம் வெளியீடு இருப்பதால், கேமரா, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட இருக்கிறது. இருப்பினும், ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களை தவிர மற்ற பீச்சர்கள் அப்படியே சீன வெர்ஷனை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, சீன வெர்ஷனின் பீச்சர்கள் மற்றும் பட்ஜெட்டை பார்க்கலாம்.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டில்பிளேவுக்கு 144 FPS கேமிங் அவுட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 2600 எச்பிஎம் மோட் மற்றும் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மட்டுமல்லாமல், டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கிறது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், கியூ3 கேமிங் சிப் இதற்கு கொடுக்கப்படுகிறது.
இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
3X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 100X டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. சீனாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,856ஆக இருக்கிறது. இந்தியாவில் விலையில் மாறுபாடு இருக்கும்.


Click it and Unblock the Notifications








