7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. 100X ஜூம்.. தேதி குறிச்ச புது iQOO போன்.. எந்த மாடல்?
ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்மாக உறுதியாகி இருக்கிறது. 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP கேமரா, 100X ஜூமிங் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் புதிய ஐக்யூ பேட், ஐக்யூ வாட்ச் மற்றும் ஐகியூ டிடபுள்யூஎஸ் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுவே, ஐக்யூ பிரியர்களுக்கு ட்ரீட்டாக இருக்கிறது. ஆனால், அதே தேதியில் ஐக்யூ பேட் 5இ (iQOO Pad 5e), ஐக்யூ வாட்ச் ஜிடி 2 (iQOO Watch GT 2) மற்றும் ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5 (iQOO TWS 5) மாடல்களும் வர இருக்கின்றன.

இதனால், ஐக்யூ பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துவிட்டது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனானாது, சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் வெளியாக இருக்கிறது. ஆகவே, ஐக்யூ நிறுவனம், அதே வெர்ஷனை மற்ற நாடுகளிலும் களமிறக்கும் என்பதால், இந்தியாவில் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏனென்றால், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சிப்செட் அப்படி இருக்கிறது.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) கிடைக்க இருக்கிறது. 100X ஜூமிங் கேமரா கிடைக்க இருக்கிறது.
டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வருகிறது. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி பிளாட் டிசைனில் 6.85 இன்ச் 2K அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144FPS கேமிங் அவுட் கிடைக்கிறது.
மேலும், 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்க இருக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கியூ3 (Q3) கம்ப்யூட்டிங் சிப் கிடைக்க இருக்கிறது. முந்தைய மாடல்களில் கியூ2 சிப் மட்டுமே கிடைத்தது. இதில் அடுத்த வெர்ஷன் களமிறங்க இருக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகின. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி வர இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ் (SONY IMX) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது.
அதேபோல 50 அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. இந்த டெலிபோட்டோவிலும் சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கிடைக்க இருக்கிறது. அதேபோல 3X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 100X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.
இதே தேதியில் ஐக்யூ பேட் 5இ பேட் வெளியாகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12.1 இன்ச் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 10,000mAh பேட்டரி கிடைக்கிறது. அதோடு 2.07 இன்டி டிஸ்பிளே, 33 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட ஐக்யூ வாட்ச் ஜிடி 2 வெளியாகிறது. ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5 மாடலானது 60dB ஏஎன்சியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








