இது iQOO ஆட்டம்.. மிட்-ரேஞ்ச் மிரள வருது 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. IP68, IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஐக்யூ பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் டியூரபிலிட்டி பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. ஏற்கனவே, சிப்செட், டிஸ்பிளே, ஓஎஸ் போன்ற பீச்சர்கள் உறுதியாகின. இப்போது, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகும்? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் அக்டோபர் 20ஆம் தேதி இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப ஐக்யூ நிறுவனம், முக்கிய பீச்சர்களை அடுத்தடுத்து உறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகின.

இப்போது, பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, ஹை-டெம்ப்ரேச்சர் மற்றும் ஹை-பிரசர் வாட்டர் ஜெட்ஸ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற மற்ற பீச்சர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கிடைக்க இருக்கிறது. வழக்கமாக கிடைக்கும் கியூ2 சிப்செட் இல்லாமல், அடுத்த வெர்ஷனாக கியூ3 (Q3) சிப் கிடைக்க இருக்கிறது. ஓர்ஜின் ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது. பெரிய பேட்டரி கிடைக்க இருக்கிறது.
ஆகவே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி வர இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிளாட் டிசைனில் பிரீமியம் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆகவே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் வர இருக்கிறது.
மேலும், 6,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு 6.85 இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) பேனலாக இருக்கப் போகிறது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. இதில் டெலிபோட்டோ கேமரா கிடைக்க போகிறது.
இந்த டெலிபோட்டோவில் 100X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமராவும் கிடைக்க இருக்கிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.
இதில் பெரும்பாலான பீச்சர்களை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துவிட்டது. ஆகவே, இதே பீச்சர்களுடன் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். முதலில் சீனாவில் களமிறங்க இருக்கிறது. இந்த மாதத்தில் வெளியாவது உறதியாகும். முன்பே சொன்னதை போல அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் விலை விவரங்கள் கசியவில்லை.
இருப்பினும், ஏற்கனவே, இந்தியாவில் வெளியான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. ஆகவே, இதே பட்ஜெட்டில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாகலாம். ரூ.59,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த விலை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மாறுபடும்.


Click it and Unblock the Notifications








