ஊர் அலற வந்த iQOO.. 7000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடலான ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 40W வயர்லெஸ் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, IP69 ரேட்டிங், கியூ3 கேமிங் சிப்செட் மற்றும் 144 ஃஎப்பிஎஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. நவம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் களமிறங்க இருப்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட் மற்றும் பீச்சர்கள் அப்படி இருக்கிறது. கேமிங் மாடலாக மட்டுமல்லாமல், கேமரா பிரியர்களுக்கும் ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது. முதலில் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு சாம்சங் நிறுவனத்தின் டிஸ்பிளே மாடலாகும். இதில், கேமிங்குக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144 ஃஎப்பிஎஸ் (FPS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 2K ரெசொலூஷன், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2600 எச்பிஎம் மோட் கிடைக்கிறது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாரும், டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாரும் கிடைக்கிறது. அதேபோல ஓஐஎஸ் டெக்னாலஜி, 3X இன்-சென்சார் ஜூமிங், 4K ரெக்கார்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 7000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,856ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.55,561ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,031ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,736ஆக இருக்கிறது.
இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹானர் ஆஃப் கிங்ஸ் 10ஆவது ஆண்டுவிழா கலெக்டர் எடிஷனின் விலை ரூ.67,918ஆக இருக்கிறது. சீனாவில் விற்பனை தொடங்கிவிட்டது. நவம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இங்கு ரூ.50,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








