Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ரூ.8,000 ஆஃபரில் 100W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் தீபாவளி எடிஷன் சேல் என்னும் சிறப்பு விற்பனையில் ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கொண்ட இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது அமேசான் தளத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.85,999 ஆக இருக்கிறது இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.77,999 விலைக்கு இந்த ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 18 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

செம்ம டிமாண்ட்.. ரூ.8,000 ஆஃபரில் 100W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி!

நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையில் வாங்கும்போது ரூ.9,000 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.76,999 விலைக்கு இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஆல்பா மற்றும் லெஜண்ட் ஆகிய கலர்களில் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. 5 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

சாம்சங் எம்14 (Samsung M14) பேனலுடன் 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது.

டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Color Gamut), டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி கேமராவை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

இதுபோக 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Fi Audio) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 15 With 12GB RAM Avaliable At Rs 8000 Discounted Price in Amazon Diwali Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X