புதுசு வந்துருச்சு.. பழசுக்கு ரூ.3,050 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகியதை அடுத்து 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே கொண்ட ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் விலை குறைப்பு மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.69,949 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.3,050 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழியாக இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.4,000 தள்ளுபடி கொடுக்கப்படும்.

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) கொடுத்து உள்ளது. 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.
இதுவொரு சாம்சங் எம்14 (Samsung M14) டிஸ்பிளே மாடலாகும். 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Color Gamut) கிடைக்கிறது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி 3X டெலிபோட்டோ கேமரா கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மெயின் கேமராவில் கிடைக்கிறது. டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைத்துள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Fi Audio) உள்ளது. ஆல்பா மற்றும் லெஜண்ட் ஆகிய கலர்களில் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிடைக்கிறது.
6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS), ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 7600mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications