நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய iQOO 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 26) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதுவும் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 specifications): இந்த ஐக்யூ 15 மாடல் 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 130Hz ஸ்க்ரீன் சாம்ப்ளிங் ரேட், 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், 508பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 840 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஸ்மர்ட்போனில் உள்ளது.
குறிப்பாக ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ 15 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்+ 50 மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்ட் என்கிற ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 100X ஜூமிங் ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவரும், இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் சிப் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6, டூயல்-பேண்ட் வைஃபை 7, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ 15 போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 221 கிராம் ஆகும்.ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ரூ.65,000 அல்லது ரூ.70,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








