iQOO நீ வேற லெவல்.. 24GB ரேம், Ice Dome ஏர் கூலிங் சிஸ்டம், 100W சார்ஜிங், 7400mAh பேட்டரி உடன் புது போன்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் ஆனது வருகிற 2026 பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. அது ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் டீஸர்களையும் வெளியிட தொடங்கி உள்ளது.
அதன் வழியாக ஐக்யூ 15அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய கேமிங் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேமிங் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதில் பெயர் பெற்ற ஒரு பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஐக்யூ நிறுவனம், ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் வழியாக "அடுத்த கட்டங்களுக்கு" செல்லவுள்ளது போல் தெரிகிறது.

வெளியான புதிய டீஸர்களின்படி, ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இன்-ஹவுஸ் க்யூ3 கேமிங் சிப்பை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த சிப் - மூன்று மேம்பட்ட அம்சங்களை ஒரே நேரத்தில் இயக்க உதவுகிறது: 2கே நேட்டிவ் அப்ஸ்கேலிங், 120எப்பிஎஸ் பிரேம் இன்டர்போலேஷன் மற்றும் பீக் செட்டிங்ஸில் ஃபுல்-சினாரியோ ரே டிரேசிங்.
இதை - தொழில்துறையில் முதல் முறையாக நாங்கள் தான் செய்கிறோம் என்றும் ஐக்யூ கூறியுள்ளது. மேலும் இது ஐக்யூ நிறுவனம் - மொபைல் ஜிபியு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் அழைக்கிறது. மேலும் இந்த அளவிலான செயல்திறனை ஆதரிக்க, ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டிவ் கூலிங் சொல்யூஷன் ஆன ஐஸ் டோம் ஏர் கூலிங் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தும்.
செயல்திறனுக்கு அப்பால், இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் 2K LTPO சாம்சங் பிளாட் டிஸ்பிளே, 24GB வரையிலான ரேம், 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா செட்டப்பில் 32MP செல்பீ கேமரா மற்றும் ட்ரிபிள் 50MP ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். இதில் CIPA 4.5 மதிப்பிடப்பட்ட 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7400mAh பேட்டரியையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோவை பொறுத்தவரை சிமெட்ரிக்கல் டூயல் 1115 கோஆக்சியல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஹாப்டிக்ஸ் 091640 டூயல்-ஆக்சிஸ் மோட்டாரையும் பேக் செய்யலாம்.
முன்னதாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக - ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஸ்கீமாடிக் (iQOO 15 Ultra schematic) லீக் ஆகி இருந்தது. அதாவது சிம்பாலிக் டயகிராம் (Symbolic Diagram) கிடைத்து இருந்தது. அதன் வழியாக ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் காற்று உட்கொள்ளல் ரியர் கேமரா யூனிட்டுக்கு அடியில் புத்திசாலித்தனமாக வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெளியேற்ற வென்ட் ஆனது சைட் பிரேமில் உள்ளதும் தெரிய வந்தது
இந்த தளவமைப்பு - ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 17 x 17 x 4 மிமீ கூலிங் ஃபேனிற்கு இடமளிக்க அனுமதிக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - இதுவரை இந்த விலைப்பிரிவில் பயன்படுத்தப்பட்ட மிக கூலிங் சிஸ்டம் இதுவாக இருக்கும். மேலும் இது மெயின் சிப்செட்டுக்கு நேரடியாகவே அருகில் அமைந்துள்ளது. இந்த வடிவமைப்பு சேஸிஸ் உள்ளே ஒரு பரந்த காற்றோட்ட சேனலை உருவாக்குகிறது, வெளிப்புற தோற்றத்தை மாற்றாமல் வெப்பச் சிதறல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
ஒரு விசிறி மற்றும் சுயாதீன காற்று குழாய் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த தொழில்துறை வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு நிலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.ஒட்டுமொத்தமாக இது நீண்ட கேமிங்கின் போது வெப்பக் கட்டுப்பாட்டை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








