Home
Mobile

iQOO போட்டான் பாரு.. 7000mAh+ பேட்டரி.. 100W சார்ஜிங்.. கூலிங் ஃபேன்.. இதுதான் முதல் Ultra மாடல்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் முதலாவது அல்ட்ரா சீரிஸ் மாடலாக ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கூலிங் ஃபேன் கொண்ட மாடலாக இருப்பதால், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது. இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ 13 (iQOO 13), ஐக்யூ 15 (iQOO 15) ஆகிய மாடல்கள் சீனாவிலும் இந்தியாவிலும் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவிட்டன. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் இந்த மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஐக்யூ 13 ஸ்மார்ட்போனில் அல்ட்ரா மாடல் வெளியாகவில்லை. ஆனால், ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் அப்படி கிடையாது.

iQOO போட்டான் பாரு.. 7000mAh+ பேட்டரி.. 100W சார்ஜிங்.. கூலிங் ஃபேன்!

அந்த மாடலுக்கு பிறகு அல்ட்ரா மாடல் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு ஏற்ப பீச்சர்களும் கசிந்தன. இப்போது, ஐக்யூ நிறுவனமே ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிமுகமாக உள்ளதை உறுதி செய்துள்ளது. ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கூலிங் சிஸ்டம் கிடைத்தது.

ஆனால், இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் கூலிங் சிஸ்டம் மட்டுமல்லாமல், கூலிங் ஃபேன் (Cooling Fan) கிடைக்க உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக ஏற்கனவே கசிந்துவிட்டது. இந்த பீச்சர்கள் மிரளவிடும்படி இருக்கின்றன.

ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra Specifications): 6.85 இன்ச் சாம்சங் எம்14 அமோலெட் (Samsung M14 AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது. மேலும், 2K ரெசொலூஷன் மற்றும் பிளாட் டிஸ்பிளே டிசைனை கொடுத்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாகவும் இருக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கிடைக்க உள்ளது. மேலும், 7000mAh+ பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஏனென்றால், ஐக்யூ 15 ஸ்மார்ட்போனிலேயே 7000mAh பேட்டரி கிடைத்தது. ஆகவே, இதில் கூடுதல் கேபாசிட்டி எதிர்பார்க்கலாம்.

மேலும், 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது. ஐக்யூ மாடல்களில் வழக்கமாக கிடைப்பதை போலவே இதிலும் கியூ3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) கிடைக்க உள்ளது. ஆக்டிவ் கூலிங் ஃபேன் (Active Cooling Fan) கிடைக்க உள்ளது. கேமிங் ஹேண்டிலுக்கு ஏற்றபடி ஷோல்டர் பட்டன்கள் கிடைக்க இருக்கின்றன. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க உள்ளது.

இந்த பீச்சர்கள் மட்டுமே இப்போது கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக இருக்கின்றன. சீன மார்கெட்டில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.55,000 பட்ஜெட்டில் இருந்தது. இந்தியாவில் ரூ.72,999ஆக இருக்கிறது. ஆகவே, இந்த அல்ட்ரா மாடல் சீன மார்கெட்டில் ரூ.65,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ரூ.80,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. சீன மார்கெட்டில் வெளியாகிய பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது. ஆகவே, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய மார்கெட்டில் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் மாடலாக இது இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Ultra With Cooling Fan China Launch Timeline Confirmed Check Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X