iQOO ஒரே போடு.. 24GB ரேம்.. 7400mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP SONY டெலிபோட்டோ.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் முரட்டு மாடலான ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. பெயருக்கு ஏற்ப கேமரா பீச்சர்களையும் அல்ட்ராவாக கொடுத்து இருப்பது தெரிகிறது. இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் முன்னதாக தெரியவந்தன. இப்போது, பிரீமியம் கேமரா பீச்சர்களை ஐக்யூ நிறுவனமே உறுதி செய்துள்ளது.

ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra Specifications): சோனி சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் சிஐபிஏ 4.5 (CIPA 4.5) ஆப்டிகல் இமேஜ் ஸ்டெலிபைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது. மேலும், என்ஐஎஸ் 3.0 ஆப்டிகல் ரீகன்ஸ்டரக்சன் என்ஜின் (NICE 3.0 Optical Reconstruction Engine) கொடுக்கப்பட்டுள்ளது.
மேஜிக் 2.0 இமேஜ் ரீஸ்டோரேஷன் என்ஜின் (Magic 2.0 Image Restoration Engine) உள்ளது. ஆகவே, முந்தைய மாடல்களை தூக்கி சாப்பிடும்படியான கேமரா டெக்னாலஜிகளை கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15 அல்ட்ரா இருக்கப் போகிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருப்பது உறுதியாகும். ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு எதிர்பார்க்கலாம்.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ 15 அல்ட்ரா கொடுக்க இருக்கிறது. இந்த கேமரா பீச்சர்கள் போக பிரீமியம் கனெக்டிவிட்டி கொடுக்க என்79 5ஜி பேண்ட் (N79 5G Band) மற்றும் ஏஐ ஈஸ்போர்ட்ஸ் சிக்னல் என்ஜின் 2.0 (AI Esports Signal Engine 2.0) கொடுக்கப்படுகிறது. யுனிவர்ஸ் மெட்ரோ கேமிங் நெட்வொர்க் (Universe Metro Gaming Network) உள்ளது.
இது ஆன்லைன் கேமிங்கில் லோவ் லேட்டன்சி கொடுக்கிறது. 6.85 இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2K ரெசொலூஷன் மற்றும் 144 FPS கொடுக்கப்பட்டு உள்ளது. முந்தைய மாடல்களை போலவே பிளாட் டிஸ்பிளே டிசைனை கொடுத்துள்ளது. ஐஸ் டோம் ஏர் கூலிங் சிஸ்டம் (Ice Dome Air Cooling System) கிடைக்கிறது.
மேலும், பில்ட்-இன் ஃபேன் (Built-in Fan) இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது. அதேபோல ஷோல்டர் டிரிகர்கள், ஹை-பிரிசியன் கைரோஸ்கோப் மற்றும் ஃபாஸ்ட் டச் ரென்ஸ்பான்ஸ் சப்போர்ட் கொடுக்கப்பட உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஐக்யூ 15 அல்ட்ரா கொண்டுள்ளது.
மேலும், கியூ 3 கேமிங் சிப் (Q3 Gaming Chip) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 24 ஜிபி ரேம் மற்றும் 1 மெமரி கொண்ட டாப் வேரியண்ட் கிடைக்க உள்ளது. 7400mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக உள்ளது. 2077 பிளாக் மற்றும் 2049 சில்வர் கலர்களில் கிடைக்க உள்ளது. இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








