Home
Mobile

வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங். 50எம்பி கேமரா. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல உலக நாடுகளில் இந்த புதிய ஐக்யூ போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப் (Snapdragon 8 Elite 2 chip) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேம்பட்ட AI அம்சங்கள் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

50எம்பி மெயின் கேமரா+ 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன. எனவே இந்த புதிய ஐக்யூ போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

6.58-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் விரைவில் சார்ஜ் செய்ய முடியும் என்பதையும் ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மாரட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும். மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Ultra specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X