மார்க்கெட்ல புது Performance கிங் இறங்குது.. கூலிங் ஃபேன் உடன் 7000mAh பேட்டரி.. iQOO-வின் புது Ultra போன்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் முதல் அல்ட்ரா-பிராண்டட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெர்பார்மென்ஸ் மீது அதிக முக்கியத்தும் வழங்கும் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் - டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் ஒரு முக்கிய அம்சம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷனுக்கு ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஸ்கீமாடிக் (iQOO 15 Ultra schematic) கிடைத்துள்ளது. அதாவது சிம்பாலிக் டயகிராம் (Symbolic Diagram) கிடைத்துள்ளது. அதன் வழியாக ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்குள் "மறைக்கப்பட்ட" ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் இருப்பது தெரியவந்து உள்ளது.

ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் காற்று உட்கொள்ளல் ரியர் கேமரா யூனிட்டுக்கு அடியில் புத்திசாலித்தனமாக வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெளியேற்ற வென்ட் ஆனது சைட் பிரேமில் உள்ளது. இந்த தளவமைப்பு - ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 17 x 17 x 4 மிமீ கூலிங் ஃபேனிற்கு இடமளிக்க அனுமதிக்கிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் - இதுவரை இந்த விலைப்பிரிவில் பயன்படுத்தப்பட்ட மிக கூலிங் சிஸ்டம் இதுவாக இருக்கும். மேலும் இது மெயின் சிப்செட்டுக்கு நேரடியாகவே அருகில் அமைந்துள்ளது. இந்த வடிவமைப்பு சேஸிஸ் உள்ளே ஒரு பரந்த காற்றோட்ட சேனலை உருவாக்குகிறது, வெளிப்புற தோற்றத்தை மாற்றாமல் வெப்பச் சிதறல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
ஒரு விசிறி மற்றும் சுயாதீன காற்று குழாய் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த தொழில்துறை வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு நிலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.ஒட்டுமொத்தமாக இது நீண்ட கேமிங்கின் போது வெப்பக் கட்டுப்பாட்டை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.85-இன்ச் சாம்சங் எம்14 டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது கர்வ்டு டிஸ்பிளேவை விட பிளாட் ஆன டிஸ்பிளே வழியிலான (கேமிங் மற்றும் டச் அக்யூரஸி மீது) அக்கறை கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இதற்கு மேல், ஐக்யூ அதன் சொந்த க்யூ3 கேமிங் சிப்பையும் பேக் செய்யும். இது கேமிங்கின் போது பிரேம் ரேட் கண்ட்ரோல் மற்றும் பவர் எபிஷியன்ஸி போன்றவற்றை கையாள வேண்டும்.
கேமராக்களை பொறுத்தவரை ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். நிச்சயமாக, இது மட்டுமே ஒரே லென்ஸ் ஆக இருக்காது. ஆனால் மற்ற சென்சார்கள் பற்றிய விவரங்கள் தற்போதைக்கு இல்லை
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 7,000mAh அல்லது அதற்கு மேற்பட்ட பேட்டரி இருக்கும். இது பிளாக்ஷிப் போன்களில் இடம்பெறும் மிகப்பெரிய பேட்டரி ஆக இருக்கலாம். இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








