முரட்டு காம்பினேஷன்-ஆ இருக்கே.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 165Hz டிஸ்பிளே.. iQOO-வின் புது Ultra போன்!
பல வாரங்களாக வெளியான லீக்ஸ் மற்றும் யூகங்கள் உண்மையாகி விட்டன. இறுதியாக., 2026 ஆம் ஆண்டில் ஐக்யூ (iQOO)நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ரா (Ultra) ஸ்மார்ட்போனின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள்?
என்ன மாடல்? அது ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்; அதாவது ஐக்யூ 15 மாடலை விட இன்னம் "பெட்டர் ஆன" அம்சங்களை கொண்டிருக்கும்.

எப்போது அறிமுகமாகும்? ஐக்யூ நிறுவனமானது ஐக்யூ 15 அல்ட்ராவின் வெளியீட்டு காலக்கெடுவை (Launch Timeline) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவில் இது ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிப்ரவரி 17 ஆம் தேதி விடுமுறைக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படும்.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்காலம்? ஐக்யூ நிறுவனம் 'அல்ட்ரா' என்கிற பெயரை பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இதுவரை ஐக்யூ நிறுவனமானது "ப்ரோ" என்கிற மாடல் பெயரை மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆக இது "இன்னும் சிறந்த அம்சங்களை விரும்பும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கான" மாடல் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2கே டிஸ்பிளேவை பேக் செய்யலாம். ஒப்பிடுகையில், ஸ்டாண்டர்ட் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.85-இன்ச் AMOLED பேனலைகொண்டுள்ளது
கேமராக்கள் மற்றும் பேட்டரியைப் பொறுத்தவரை, அல்ட்ரா மாடல் ஆனது பெரும்பாலும் ஸ்டாண்டர்ட் மாடலுக்கு அருகில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய அல்ட்ரா மாடல் ஆனது ஐக்யூ 15 மாடலில் உள்ளதை போன்ற 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 7000mAh பேட்டரி ஆகியவைகளை பெறலாம்
இப்போதைக்கு ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய சந்தை உட்பட உலகளாவிய அறிமுகம் குறித்த விவரங்கள் இல்லை. இருப்பினும் ஒரு காலத்தில் "சைனீஸ் எக்ஸ்க்ளூஸிவ்" என்று கூறப்பட்ட ஸ்மார்ட்போன்கள், சமீப காலமாக இந்தியாவிலும் (அதே பெயரில் அல்லது ரீபிராண்ட்டட் ஆக) அறிமுகம் செய்யப்படுவதால், எல்லா மாடல்கள் மீதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது!.
முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் லெஜெண்ட் கலர் ஆப்ஷன் ரூ.200 விலை குறைக்கப்பட்டு ரூ.72,799 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








