Home
Mobile

பிப்.4-ல் சம்பவம் இருக்கு.. 7400mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 4-ம் தேதி இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும். மேலும் இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் (Snapdragon 8 Elite Gen 5 chip) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்.4-ல் சம்பவம் இருக்கு.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் 6.78-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2K ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேம்பட்ட AI அம்சங்கள் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம். அதுவும் இந்த போன் 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா+ 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. எனவே இந்த புதிய ஐக்யூ போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் வெளிவரும்.

பிப்.4-ல் சம்பவம் இருக்கு.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்?

7400mAh பேட்டரி உடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் விரைவில் சார்ஜ் செய்ய முடியும் என ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரிஜின்ஓஎஸ் 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Image Credit: Weibo/ @iQOO phone, gizmochina

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X