தலைவன் வேற ரகம்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. மிரளவிடும் டிசைனில் iQOO 15 Ultra!
ஐக்யூ நிறுவனத்தின் அல்ட்ரா சீரிஸ் மாடலான ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலர் வேரியண்ட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளன. ஆக்டிவ் கூலிங் ஃபேன் மற்றும் கேமிங் ஷோல்டர் பட்டனுடன் 2 கலர் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், அறிமுக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வருகிற பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிறகு, குளோபல் மார்கெட் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கு ஏற்ப பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து வருகின்றன. இப்போது, அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் கலர் மற்றும் டிசைன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கூலிங் ஃபேன் உள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. கேமரா டெகோவில் ஆக்டிவ் கூலிங் ஃபேனை பார்க்க முடிகிறது. ஆகவே, விசி கூலிங் சிஸ்டம் கிடைக்க உள்ளது. 2077 (பிளாக்) மற்றும் 2049 (சில்வர்) ஆகிய கலர்களில் வெளியாக உள்ளது. அரிசோன்டல் எல்இடி கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைன் கொண்டுள்ளது. இந்த விவரங்களை மட்டுமே அந்த போஸ்டர்களில் பார்க்க முடிகிறது.
முன்னதாக பிரசர் சென்சிடிவ் ஷோல்டர் டிரிகர்கள் (Pressure-sensitive Shoulder Triggers) கிடைக்க இருப்பது தெரியவந்தது. ஆகவே, கியூ3 கேமிங் சிப்செட் (Q3 Gaming Chip) மட்டுமல்லாமல், ஆக்டிவ் கூலிங் ஃபேன், விசி கூலிங் சிஸ்டம், கேமிங் ஷோல்டர் டிரிகர்கள் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது. டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன.
ஐக்யூ 15 அல்ட்ரா அம்சங்கள் (iQOO 15 Ultra Specifications): ஆக்டா கோர் ஸ்னார்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. மேலும், கியூ3 கேமிங் சிப்செட்டை கொடுக்க உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh+ பேட்டரி கிடைக்க இருக்கிறது.
மேலும், வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. 6.85 இன்ச் சாம்சங் அமோலெட் எம்14 ( Samsung AMOLED M14) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. இதில் 2K ரெசொலூஷன் கொடுக்கப்பட உள்ளது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் சோனி லைட்டியா 600 (Sony LYT 600) சென்சார் கொடுக்கப்பட உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமரா வர உள்ளது.
இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ரூ.72,999 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகியது. ஆகவே, இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியானால், ரூ.80,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும். ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் 50 எம்பி சோனி சென்சார் மெயின் கேமரா உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் 16 மற்றும் கலர்ஓஎஸ் 6.0 கிடைக்கிறது. 6.85 இன்ச் சாம்சங் அமோலெட் எம்14 டிஸ்பிளே உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 7000mAh+ பேட்டரி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








