Home
Mobile

நவம்பர் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது iQOO 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 20-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது ஐக்யூ நிறுவனம். இந்நிலையில் இந்த போனின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஐக்யூ 15 போன் அறிமுகம் செய்யப்படும் என ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஐக்யூ 15 போனின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை இந்தியாவில் iQOO வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மரியா உறுதிப்படுத்தினார். மேலும் இந்த புதிய ஐக்யூ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

நவம்பர் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6.85-இன்ச் வசதியுடன் இந்த ஐக்யூ 15 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ 15 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய ஐக்யூ 15 போன் வெளியாகும்.

ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த புதிய ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.

50எம்பி IMX9 சீரிஸ் மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி IMX8 சீரிஸ் டெலிபோட்டோ என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 100X ஜூமிங் ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

நவம்பர் உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் சிப் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7000mAh பேட்டரி உடன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ 15 போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 to launch in India in November 2025: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X