ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 5 வருட OS அப்கிரேட்.. 7000mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மாடலாக ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் உறுதியாகியவிட்டன. இப்போது, ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. ஒட்டுமொத்த ஐக்யூ பிரியர்களும் மிரளும்படி 5 வருட ஓஎஸ் அப்டேட் கிடைக்க இருப்பது தெரிகிறது.
இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் 26ஆம் தேதி இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட ஆல்பா பிளாக் (Alpha Black) மற்றும் லெஜண்ட் ஒயிட் (Legend White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கின்றன?

ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கிடைக்க இருக்கிறது. சூப்பர்கம்ப்யூட்டிங் கியூ2 கேமிங் சிப்செட் மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக பெரிய சிங்கிள் லேயர் விசி கூலிங் சிஸ்டம் (Single layer VC Cooling System) கொடுக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 2600 நிட்ஸ் எச்பிஎம் மோட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு எம்14 டிஸ்பிளே மாடலாகும். 2K நேட்டிவ் சூப்பர் ரெசொலூஷன் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்காக 144 ஃஎப்பிஎஸ் (FPS) கேமிங் ஃபிரேம் கிடைக்கிறது. மேலும், பிசி-கிரேடு ரேய் டிரேஷிங் (PC-Grade Ray Tracing) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதில் சோனி சென்சார் (Sony Sensor) மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்களை மட்டுமே ஐக்யூ இந்தியா (iQOO India) நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்த போன் சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மட்டுமே கொடுக்கப்படும். இருப்பினும், இந்தியாவில் முன்கூட்டியே கசிந்துவிட்டது.
ஸ்மார்ட்பிரிக்ஸ் (Smartprix) அறிக்கையின்படி இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனுக்கு 5 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தியாவில் வெளியாகும் முதல் ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15 இருக்கப் போவது உறுதியாகியது.
இப்போது, ஓஎஸ் அப்கிரேட் விவரங்கள் கசிந்து, அந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. சீன மார்கெட்டில் வெளியான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டது. இதில் சோனி சென்சார்கள் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டன.
32 எம்பி செல்பீ கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைத்தது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,000 பட்ஜெட்டில் இருந்தது. இந்தியாவிலும் இதே பீச்சர்கள் மற்றும் ரூ.55,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








