Home
Mobile

இனி கருப்பு இதுதான்.. கோட் மோடில் iQOO.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 8000 மிமீ VC கூலிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனில் பிளாக் (Black) கலர் வெர்ஷன் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே, வெளியீட்டு தேதி, சிப்செட், டிஸ்பிளே மற்றும் ஓஎஸ் விவரங்கள் உறுதியாகின. இப்போது, கலர் வெர்ஷன் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக, ஒயிட் வெர்ஷன் வெளியாக இருப்பது தெரிந்தது. இப்போது பிளாக் கலரும் சேர்ந்திருப்பதால், இந்தியாவில் இருக்கும் ஐக்யூ பிரியர்கள் குஷியாகிவிட்டனர். இந்த ஐக்யூ 15 போனின் வெளியீட்டு தேதி, பீச்சர்கள், விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன மார்கெட்டில் கடந்த வாரம் வெளியான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் லிங்யுன் (Lingyun), லெஜண்டரி எடிஷன் (Legendary Edition), டிராக் எடிஷன் (Track Edition) மற்றும் வைல்டெர்னஸ் (Wilderness) ஆகிய கலர்கள் வெளியாகின. இதைடுத்து நவம்பர் 26ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று ஐக்யூ நிறுவனம் உறுதி செய்தது. அதோடு, ஒயிட் கலர் வெர்ஷன் மட்டும் உறுதியாகியது.

இனி கருப்பு இதுதான்.. கோட் மோடில் iQOO.. 7000mAh பேட்டரி.. மாடல்?

பொதுவாக சீனாவில் வெளியாகும் ஐக்யூ மாடல்கள் இந்தியாவில் வெளியாகும்போது, கலர் மற்றும் ரேம் + மெமரி வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்படும். இதனால், எந்த கலர் வெர்ஷன் வெளியாகும் என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்யும் வரையில் கண்டுபிடிக்க முடியாது. இருப்பினும், ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பிளாக் வேரியண்ட் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஏனென்றால், பிளாக் கலர் என்பது ஐக்யூ மட்டுமல்லாமல், மொத்தமாகவே ஸ்மார்ட்போன்களில் அதிகம் விரும்பப்படும் கலராக இருக்கிறது. இப்படிப்பட்ட பிளாக் வெர்ஷன் இந்தியாவில் வெளியாக இருப்பதை ஐக்யூ நிறுவனம் இப்போது உறுதி செய்துள்ளது. ஆகவே, ஒயிட் மற்றும் பிளாக் கலர் வெர்ஷன்கள் இதுவரை உறுதியாகி இருக்கின்றன. இந்த போன் அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஆகவே, அந்த தளத்தில் அதிகார்பூர்வ போட்டோக்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் மற்றும் கியூ3 (Q3) கேமிங் சிப் கிடைக்க இருப்பது உறுதியாகியது. அதேபோல ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க இருப்பதும் உறுதியாகியது.

இதுபோக பிளாட் டிசைனில் 2K ரெசொலூஷன் மற்றும் 144 FPS கேமிங் கொண்ட டிஸ்பிளே வர இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் இதுவரை வெளியாக ஸ்மார்ட்போன்களிலேயே பெரிய 8000 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்ட மாடலாகவும் இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.

இருப்பினும், சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, இந்த ஐக்யூ 15 அம்சங்களை (iQOO 15 Specifications) பார்க்கையில், 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

ஆகவே, 100X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. ரூ.50,000 பட்ஜெட்டில் வர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Snapdragon 8 Elite Gen 5 Black Colour To Launch on November 26 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X