Home
Mobile

வந்துட்டான்.. அல்டிமேட் விலையில் OnePlus 15 வில்லன்.. FREE பட்ஸ், 1 வருட எக்ஸ்ட்ரா வாரண்டி.. புது iQOO போன்!

அறிமுகமான 1 மணி நேரத்தில், ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் அவசர அவசரமாக விற்பனைக்கு வர காரணம் - ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் தான். இது வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது. இது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வருவதால் தான், இந்தியாவில் அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் 15 அவசர அவசரமாக விற்பனைக்கு வந்தது.

வந்துட்டான்.. அல்டிமேட் விலையில் OnePlus 15 வில்லன்.. FREE பட்ஸ்!

இதற்கிடையில் நவம்பர் 20 அன்று மேற்குறிப்பிட்ட அதே சிப்செட் உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஐக்யூ 15 அறிமுகத்தை முன்னிட்டு ஐக்யூ நிறுவனம் ஒரு "முன்னுரிமை பாஸை" (Priority Pass) அறிவித்துள்ளது.

இந்த முன்னுரிமை பாஸை வைத்திருக்கும் பயனர்களுக்கு முதலில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வழங்கப்படும். இந்த பாஸை பயனர்கள் அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பக்கத்திலிருந்தும் ஐக்யூ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தும் வாங்கலாம்.

ஐக்யூ 15 முன்னுரிமை பாஸ் விலை மற்றும் சலுகைகள் குறித்த விவரங்கள்: ஐக்யூ 15 ஸ்மார்ட்போனிற்கான முன்னுரிமை பாஸின் விலை ரூ.1,000 ஆகும். இதை வாங்குவதன் மூலம் நீங்கள் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து, அதனால் கிடைக்கும் ப்ரீ-ஆர்டர் நன்மைகளை பெறலாம்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (நவ.20) மாலை 6 மணி முதல் தொடங்குகிறது. முன்னுரிமை பாஸை வாங்கி, முன்பதிவு செய்யும் பயனர்கள், ஐக்யூ 15ஸ்மார்ட்போனிற்கான முதல் டெலிவரியை பெறுவார்கள். அதோடு ரூ.1,899 மதிப்புள்ள ஐக்யூ டிடபுள்யூஎஸ் (iQOO TWS) மற்றும் ஐக்யூ 15-க்கான 12 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறுவார்கள். இதுதவிர்த்து வெளியீட்டு நாளில் (நவ.26) பிரத்யேக சலுகைகளும் கிடைக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்

- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- விலை ரூ.64,999 முதல் தொடங்கலாம்

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 144ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 100 சதவீதம் sRGB ஆதரவு
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா
- டூ ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 22மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 30 fps இல் 8கே வீடியோ ரெக்கார்டிங்
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15 Pre Booking Starts November 20 What Benefits You Will get For Rs 1000 Priority Pass
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X