விட்றாதீங்க ப்ரோ.. ரூ.1000 தந்து இதை பண்ணுங்க.. நவ.20 முதல் ஆரம்பம்.. iQOO போன் கூடவே TWS இயர்பட்ஸ் வந்துரும்!
ஐக்யூ நிறுவனம் ரூ.1,000 செலுத்தி ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனை ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க இருக்கிறது. ஐக்யூ டிடபுள்யூஎஸ் மட்டுமல்லாமல், 12 மாதங்களுக்கு வாரண்டி நீட்டிப்பு கொடுக்க இருக்கிறது. இந்த நேரத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்ட இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஐக்யூ நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இதே சிப்செட் பர்ஃபாமென்ஸ் கொண்ட மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையில் விலை அதிகமாகவே இருக்கின்றன. இதை உறுதி செய்யும்படி ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

நவம்பர் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலைக்கு கிடைக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. இந்த சிப்செட்டுடன் ரூ.60,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருப்பதாக கேஜெட்ஸ்360 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டி மாடல்களைவிட மலிவான விலையாகும்.
இதற்கு போட்டி மாடலாக இருக்கும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் ரூ.75,000 பட்ஜெட்டிலும், ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் ரூ.65,000 முதல் ரூ.70,000 பட்ஜெட்டிலும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஐக்யூ 15 ஸ்மார்ட்போனானது, பிரீமியம் பர்ஃபாமென்ஸை மற்ற மாடல்களைவிட மலிவாக கொடுக்க இருக்கிறது.
இதே போலத்தான் முன்னதாக வெளியான ஐக்யூ 13 ஸ்மார்ட்போனுக்கும் நடந்தது. அதாவது, ஸ்னாப்டிராக் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கொண்ட மாடல்களில் கம்மியான விலைக்கு வெளியாக மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விலை விவரங்கள் வெளியாகியதை அடுத்து ஐக்யூ நிறுவனம் ப்ரீ-புக்கிங் சலுகைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்த ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் ப்ரீ-புக்கிங் நவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது. ரூ.1,000 செலுத்தி பீரியாரிட்டி பாஸ் பெற்று கொள்ளலாம். இதுவொரு லிமிடெட் ப்ரீயட் சலுகையாக இருக்கிறது. ஆகவே, முதலில் புக் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல ரூ.1,000 ரீபண்ட் செய்யப்பட்டுவிடும். இந்த பாஸ் மூலம் கிடைக்கும் சலுகைகள் எப்படி?
ஐக்யூ டிடபுள்யூஎஸ் 1இ (iQOO TWS 1e) இயர்பட்ஸ் இலவசமாக கிடைக்கும். 12 மாதங்களுக்கு வாரண்டி நீட்டிக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. பேங்க் தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளை ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் வெளியான பிறகு பெற்று கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்?
ஐக்யூ 15 அம்சங்கள் (iQOO 15 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் எலைட் ஜென் 5 சிப்டெட் மற்றும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிடைக்க இருக்கிறது. கியூ3 சூப்பர்கம்ப்யூட்டிங் கேமிங் சிப் மற்றும் 16 ஜிபி ரேம் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்படுகிறது. 6.85 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.
இதில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








